மன்னார் பாக்குநீர் ஊடாக கடத்தலில் ஈடுபட்ட மூவர் கடற்படையினரால் கைது

இலங்கை நாட்டிலிருந்து பாக்குநீர் ஊடாக தங்கம் மற்றும் வலம்புரி சங்கு ஒன்றையும் கடத்த முற்பட்டவர்களை இலங்கை கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது;
தலைமன்னார், பேசாலை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது பேசாலை கடற்பரப்பு பகுதியிலிருந்து படகு ஒன்று வருகை தந்த போது இவற்றில் கடற்படையினர் சந்தேகம் கொண்டு அப் படகை கடற்படையினர் சோதனையிட்டபோது அதிலிருந்து 470 கிராம் தங்கமும், வலம்புரிச் சங்கு ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் திங்கள் கிழமை (25.07.2022) இரவு இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 9 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக படகில் இருந்த 3 சந்தேக நபர்களை கடற்படையினர் தடயப் பொருட்களுடன் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் புத்தளம் பகுதியைச் சார்ந்தவர்களும் எனவும், இவர்கள் 24 மற்றும் 39 வயதுகளுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், கைப்பற்ப்பட்ட படகு தங்கம் மற்றும் சங்கு ஆகியவற்றை கடற்படையினர் யாழ்ப்பாணம் சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பாக்குநீர் ஊடாக கடத்தலில் ஈடுபட்ட மூவர் கடற்படையினரால் கைது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)