மன்னார் நகர் பகுதிக்கு எரிபொருள் வினியோகம்

இன்று மன்னார் நகருக்கு பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கு குறிக்கப்பட்ட நேரங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட படி பகுதி பகுதிகளாக மக்கள் தத்தமது வாகனங்களுடன் ஐ.ஓ.சி. பெற்றோல் வினியோகிக்கும் இடத்திற்கு சென்று வழமைபோன்று கியூவில் காத்திருந்தனர்.

துர் அதிஸ்ரவசமாக இன்று மின்சாரம் தடைப்பட்டதினால், ஆரம்பத்தில் சென்று கியூவில் நின்றவர்கள் ஏமாற்றத்தில் திரும்பினார்கள்.

இவ்வளவு காலமும் மன்னார் நகருக்கும், அதை அண்டிய பகுதிகளுக்கும் காற்றாடி மூலம் கிடைக்கப் பெற்ற மின்சாரம் மூலம் வினியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், சமீப காலமாக அந்த மின்சார வினியோகம் தடைபட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் எரிபொருள் வினியோகமும் இன்று தடங்கலானதுக்குக் காரணமெனக் கருத்துகளும் நிலவுகின்றது.

இவ்வாறு, தடைப்படும் வினியோகங்களுக்கு முன்கூட்டிய வகுக்கப்பட்ட திட்டங்கள் சரிவர அமையாததுதான் காரணமென்ற கருத்துகளும் கூறப்படுகின்றது.