
posted 27th July 2022
மன்னார் மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்களின் தேவையை உணர்ந்து தலைமன்னார் பியர் - மடு றோட் விஷேட புகையிரத சேவை, பிரயாணிகள் குறைவின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே இணைப்பு போக்குவரத்து சேவையின்மையே இதற்கு முக்கிய காரணம் என பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது, அன்று தொட்டு தலைமன்னார் பியர் கொழும்பு கோட்டை வரைக்கும் இடம்பெற்று வந்த புகையிரத சேவையானது, யுத்த காலங்களில் இச் சேவை இடைநிறுத்தப்பட்டு, மதவாச்சி - கொழும்பு கோட்டை சேவையாக இடம்பெற்று வந்தது.
இதைத் தொடர்ந்து யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்தபின் இந்திய அரசின் உதவியுடன் மீண்டும் தலைமன்னார் பியரிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்று நோய் காரணமாக இக் காலத்தில் மீண்டும் இச் சேவை இடைநிறுத்தப்பட்டு இத் தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின் இத் தலைமன்னார் - கொழும்பு புகையிரத சேவையானது தலைமன்னார் பியர் - அனுராதபுரம் வரைக்குமான சேவையாக குறுகியதாக்கப்பட்டது.
இவ்வாறு இருக்க, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியதும் போக்குவரத்து சேவைகள் யாவும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையாக மாறியதுடன் சில இடங்களுக்கான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. இவ்வாறு ஒரு சில வாரங்கள் புகையிரத சேவைகளும் இப் பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வேளையில் இடைநிறுத்தப்பட்ட புகையிரத சேவையானது மீண்டும் 18.07.2022 அன்று வழமைக்கு திரும்பி தலைமன்னார் பியர் - அனுராதபுரம் வரைக்குமான சேவையாக ஆரம்பிக்கத் தொடங்கின.
இதன்படி தலைமன்னார் பியரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படுகின்ற புகையிரதம் அனுராதபுரத்தை காலை 8.30 க்கு சென்றடைகின்றது. பின் அங்கிருந்து காலை 11.15 க்குப் பறப்படுகின்ற இப் புகையிரதம் தலைமன்னார் பியருக்கு பிற்பகல் 1.40 மணிக்கு சென்றடைகின்றது.
அத்துடன் இச் சேவைகளுடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட உள்ளுர் விஷேட சேவையாக தலைமன்னார் பியரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி மடுறோட் புகையிரத நிலையத்தை பிற்பகல் 4 மணிக்குச் சென்றடைந்து, மீண்டும் அங்கிருந்து பிற்பகல் 4.30 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு தலைமன்னார் பியரை வந்தடையும் சேவையாக இது அமைந்து வந்தது.
ஆனால் இவ் விஷேட சேவை தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. பிரயாணிகள் உத்தியோகத்தர்கள் பயன்படுத்துவது மிக குறைவாக காணப்பட்டதாலேயே இது நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பிரயாணகள் கருத்து தெரிவிக்கையில் மன்னார் நகர் மற்றும் கிராம புறங்களிலிருந்து ரயில்வே நிலையங்களுக்கான இணைப்பு சேவைகள் இன்மையாலேயே பெரும்பாலான பிரயாணிகள் ரயிலில் பயணிக்க முடியாது இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY