மன்னாரில் குருதி தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக பேசாலையில் இரத்த தானம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்தூர் பதி ராஜா அண்மையில் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கமைவாக வெள்ளிக்கிழமை (15.07.2022) காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இரத்தானம் வழங்கும் முகாம் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இம் முகாமானது 'வெற்றியின் சிறகுகள்' என்ற ஒரு அமைப்பின் ஆதரவில் 'இரத்ததானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்' என்ற தொனிப்பொருளில் இவ் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பல இளைஞர்கள் ஆண், பெண் இரு பாலார்களும் உட்பட பலர் இங்கு இரத்ததானம் வழங்குவதில் ஆர்வம் காட்டியதும் காணக்கூடியதாக இருந்தது.

மன்னாரில் குருதி தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக பேசாலையில் இரத்த தானம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY