
posted 14th July 2022
மன்னார் முருங்கன் பகுதியில் ஒரு குடும்ப பெண் தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ. குணகுமார் மேற்கொண்ட மரண விசாரணையிலிருந்து தெரிய வருவதாவது;
முருங்கன் பகுதியிலுள்ள மாவிலங்கேணி விளாரிக்குளத்தைச் சேர்ந்த ஒரு குடும்ப பெண் பிரகாஸ் ஆரோக்கிய மேரி (வயது 27) என்பவரே தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை (12.07.2022) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் கணவரின் சாட்சியத்திலிருந்து தெரிய வருவதாவது;
தான் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் வருணம் தீட்டும் தொழிலுக்காக மன்னார் பகுதிக்கு வந்திருந்த பொழுதே இவரை திருமணம் செய்ததாகவும் இறந்த மனைவி தையல் தொழில் செய்து வந்ததாகவும், தாங்கள் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகின்றது எனவும், தாங்கள் இருவருமே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் சில காலமாக எங்கள் குடும்பத்தில் பிரச்சனை நிலவி வந்ததாகவும் தங்களுக்கு பிள்ளைகள் இல்லை எனவும் தெரிவித்ததுள்ளார்.
சம்பவம் அன்று தான் வீட்டுக்கு இரவு எட்டு மணிக்குப் பின் வந்தவேளையில் அப்பொழுது மின்சாரம் தடைப்பட்டிருந்தமையால் தான் மனைவியை அழைத்ததாகவும் இதற்கு பதில் கிடைக்காமையால் விளக்கை கொழுத்திக் கொண்டு வீட்டுக்குள் சென்ற பொழுது மனைவி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததாகவும், பின் அயலவர்களின் உதவியுடன் இவரை இறக்கி பார்த்தபோது இவர் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதேச பரிசோதனை முடிவுற்றதும் இறந்தவரின் சடலத்தை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY