மன்னாரில் 203 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

சந்தேகத்தின் நிமித்தம் படகு ஒன்றை சோதனை செய்த கடற்படை அதிகாரிகள் சுமார் 203 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் திங்கள் கிழமை (11.07.2022) மாலை இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது. சம்பவம் அன்று முழங்காவில் கடற்படை முகாம் கடற்படையினர் சந்தேகத்தின் நிமித்தம் படகு ஒன்றை சோதனை செய்தபோது அதற்குள் சுமார் 203 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக சந்தேகத்தின் நிமித்தம் வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளையும், சந்தேக நபரையும் கடற்படையினர் பொலிசாரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, இலுப்பைக்கடவை பொலிசார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரனையை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பொருளையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் 203 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)