பொருளாதார நெருக்கடியால் பேக்கரி உற்பத்தி நிற்கும் அபாயம்!

தற்போதைய நெருக்கடி மற்றும் பொருளாதார சூழ்நிலையில் பாண்கள் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பேக்கரி உற்பத்திகளை நிறுத்த வேண்டி வரும் என வரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பேக்கரி உணவு உற்பத்திக்கான பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக தற்போது பேக்கரிகளில் 50 வீத உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மிகுதியும் மிக விரைவில் நின்றுவிடும். பேக்கரித் தொழில் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகவும், நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வீழ்ச்சியடையும் எனவும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் தெரிவித்தோம். ஆனால் அமைச்சரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.

பேக்கரி உற்பத்தியும் அத்தியாவசிய சேவை பிரிவின் கீழ் வருகிறது. ஆனால் பேக்கரி தொழிலை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

பொருளாதார நெருக்கடியால் பேக்கரி உற்பத்தி நிற்கும் அபாயம்!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)