
posted 24th July 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கமல் குணரட்னவை நியமித்திருப்பது மிகவும் பொருத்தமான செயலாகும்.
இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு. கமல் குணரட்ன அவர்கள் பாதுகாப்பு செயலாளராக கடந்த அரசில் பொறுப்பேற்றது முதல் நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகச்சிறந்த முறையில் இருந்ததை கண்டோம்.
பெரும்பாலும் பொலிசாரும், இராணுவத்தினரும் மிகவும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டதையும் நாட்டின் எந்தவொரு மூலையிலும் பயங்கரவாத செயல்கள் மீழாத வகையில் நாட்டை ஸ்தீரமாக வைத்ததில் கமல் குணரட்னவின் பங்கு அளப்பரியதாகும்.
இனவாதம், மத வாதம் இல்லாத சிறந்த ஆளுமையையும், திறமையையும் கொண்ட திரு. கமல் குணரட்னவை மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமித்தமைக்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் திரு. கமல் குணரட்னவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY