பேசாலையில் கேஸ் முதன் முதலாக விநியோகிக்கப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் பேசாலை பகுதிக்கு மிக நீண்ட காலத்துக்குப் பின் சனிக்கிழமை (16.07.2022) லிற்ரோ கேஸ் வந்ததைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நீண்ட கியூவில் மக்கள் நின்று கேஸ் பெற்றுச் சென்றனர்.

இலங்கையில் கேஸ் தட்டுப்பாடு நிலவிய காலத்திலிருந்து பேசாலைக்கு கேஸ் எரிபொருள் வராத நிலையில் இப் பகுதியிலுள்ள மக்கள் மிக சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர்.

முன்பு மன்னார் பகுதிக்கு கேஸ் எரிபொருள் வரும் பட்சத்தில் இவை உயிலங்குளம் பகுதியில், பிற்பாடு மன்னார் நகருக்குள் மட்டுமே விநியோகித்து வரப்பட்டது.

இதனால் இப் பகுதியை அண்டியிராத மக்கள் கேஸ் எரிபொருள் பெற முடியாத நிலையிலேயே காணப்பட்டனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மன்னார் நகருக்குள் கேஸ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. ஆனால், பேசாலையில் வாழ் மக்களுக்கு கேஸ் விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென இப் பகுதி மக்கள் அன்று மன்னார் தலைமன்னார் ஏ14 பிரதான வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து பேசாலைக்கு விரைவில் கேஸ் எரிபொருள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் சனிக்கிழமை (16.07.2022) காலையில் பேசாலைக்கு எரிபொருள் கொண்டு வரப்பட்டு லிற்றோ கேஸ் நிறுவனத்தினாலேயே நேரடியாக விநியோகிக்கப்பட்டது.

நீண்ட வரிசை காணப்பட்டபோதும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட காட்டில் பதிவு செய்யப்பட்டு 550 பேருக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பேசாலையில் கேஸ் முதன் முதலாக விநியோகிக்கப்பட்டது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More