
posted 23rd July 2022
நாடளாவிய ரீதியல் புதிய நடைமுறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுவரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் எரிபொருள் விநியோகம் தற்சமயம் கிரமமாக இடம்பெற்றுவருகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சிலவார காலமாக எரிபொருட்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டிருந்த போதிலும் கடந்த 21ஆம் திகதி முதல் மீண்டும் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
தேசிய எரிபொருள் பாஸ் நடைமுறையின் கீழ் பெற்றோல் மற்றும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்ற போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் கியூ வரிசைகள் நீண்டதாகவே காணப்படுகின்றன.
புதிய நடைமுறையின்படி வாகனங்களின் இலக்க கடைசி இலக்கங்களின்படி எரிபொருள் விநியோக தினங்கள் ஒதுக்கப்பட்டு, தற்சமயம் பெற்றோல் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
தேசிய எரிபொருள் பாஸ் நடைமுறையின்படி எரிபொருள் விநியோகிக்கப்படுமெனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை “சிபெட்கோ” பொருட்படுத்தாது எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தலைவர் குமாரராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY