
posted 13th July 2022
20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை
இலங்கையில் 450 கிராம் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஸில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வது மறுக்கப்பட்டது
இலங்கையின் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது குடிவரவு அதிகாரிகள், தமது கடமைகளை புறக்கணித்தமையை அடுத்து, பஸில் ராஜபக்ஷ மீண்டும் நாட்டுக்குள் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான தமிழ் மீனவர்கள் விளக்கமறியலில்
காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட மீனவர்களில் ஆறு பேர் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதனை அடுத்து நீதவான் 06 மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY