பயனாளிக் குடும்பத்திற்கு வீடு

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் ஜே/315 கிராமத்தில் உள்ள பயனாளிக் குடும்பம் ஒன்றிற்கான வீடு அமைக்கப்பட்டு 22/07/2022 வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

ஸ்ரீ சத்தியசேவா அமைப்பின் நிதிப் பங்களிப்பில் இலங்கை இராணுவத்தினரின் சரீர உழைப்பில் குறித்த 15இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் நிகழ்வில் ஸ்ரீ சத்தியசேவா அமைப்பின் தலைவர் மனோகரன், சத்தியசேவா அமைப்பின் தேசிய இணைப்பாளர் கு. சிவராம், 52வது படையணித் தலையக அதிகாரி மேஜர் ஜெனரல் பெர்ணாந்து, 523ஆவது படையணித் தலைமையக அதிகாரி, சந்திரபுரம் கிராம அலுவலர், மட்டுவில் சந்திரமௌலீசா பாடசாலை அதிபர், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பேர்த்தியாரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் இரு சகோதரர்களுக்கே குறித்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயனாளிக் குடும்பத்திற்கு வீடு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY