நீதி உயிருள்ளதா? - செந்திவேல்

ஊடக அறிக்கை

இராஜபக்ச குடும்பத்தின் பணபல ஆதிக்கத்தாலும், அமெரிக்க இந்திய ஆதிக்க சக்திகளின் அரவணைப்பாலும் கடந்த பொதுத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வரமுடியும் என்பதை ரணில் விக்கிரமசிங்காவின் பாராளுமன்றத் தெரிவு நிரூபித்திருக்கிறது.தொடர்ந் தும் ராஜபக்ச குடும்பமே ஆட்சி அதிகாரம் செலுத்தப் போகிறது.

இத்தகைய ஒரு ஜனநாயக விரோத தேசவிரோத மக்கள்.விரோத செயற்பாட்டிற்கு அரசியல் யாப்பும் அதன் கீழான சட்டங்களும் அங்கீகாரம் வழங்கியுள்ளன. அவ்வாறெனில் அரசியல் யாப்பும் பாராளுமன்றமும் அவற்றின் கீழான சட்டங்களும் நாட்டின் ஏகப் பெரும்பான்மை யான உழைக்கும் மக்களுக்கு கடுகளவுக்கும் உதவப்போவ தில்லை என்பதை மீண்டுமொருமுறை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

ஆதலால்;

  • தேசம் முழுவதற்கான தேசிய ஜனநாயகத்தை வென்றெடுத்து நிலைநிறுத்த வேண்டும்.
  • அதற்கான ஒரே மார்க்கம் பரந்துபட்ட அளவிலான அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய வெகுஜனப் போராட்டமாகும். அதன் பிரதான கோரிக்கை இதுவரையான காலமும் சொத்து சுகம் பெற்று அரசியல் ஏமாற்றுகள் மூலம் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டின் வளங்களையும் மக்களின் உழைப்பையும், வாழ்வாதாரங்ளையும் சுரண்டி கொழுத்தவர்கள் அரசியல் அரங்கில் இருந்து தூக்கி வீசப்படவேணடும் .
  • நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும்.
  • அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் மோசடிகள் மூலமாகக் கொள்ளையடித்த கோடி கோடியான பணம் மீட்கப்பட வேண்டும்.
  • ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்களைக் கொன்று குவித்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவரும் உரிய விசாரணைகளுக்கும் தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட.வேண்டும்.
  • அதேபோன்று தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கொண்டு வராது நாட்டைக் கொடிய போருக்குள் தள்ளி அதன் மூலம் கோடி கோடியாகச் சம்பாதித்தவர்கள் விசாரணைகளுக்கும் தண்டனைகளுக்கும் ஊள்ளாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதிப் பதவி பெற்றமை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

நீதி உயிருள்ளதா? - செந்திவேல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)