நிகச்சுத்தி (Paronychia) வராமல் தடுக்கும் வழியென்ன?
நிகச்சுத்தி (Paronychia) வராமல் தடுக்கும் வழியென்ன?

நிகச்சுத்தி என்பது நிகத்தின் முக்கியமாக நிகத்தின் இருமருங்கும் குறிப்பாக கால் பெருவிரலில் உண்டாகும் ஒருவகைக் கிருமித் தொற்றாகும் கிருமித் தொற்றாகும்.

இந்நோயில், கிருமிதான் விரலுக்குத் தொற்றுகிறதே ஒளிய, கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுவதில்லை. எனவே, இந்நோயைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்நோய் எந்தக் கிருமியினால் வருகின்றது? என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம்.

ஆனால் நான் இங்கு சொல்லப் போவது, எப்படி இந்த நோயினால் ஏற்படும் நோவிலிருந்தும், அதன் நோயின் சிக்கல்களிலிருந்தும் (complications), அதனால் ஏற்படும் பணச் செலவுகளிலிருந்தும் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதுதான்.
அதாவது, இவை ஒன்றும் வராமல் தடுப்பது என் வழி. வந்துவிட்டால் வைத்தியரைப் பார்ப்பதுதான் ஒரு வழி.

இந்நோய் வரமுன்போ அல்லது வரப்போகிறதென்று தெரியும்போதே அதை அடியோடு கிள்ளி எறிந்து விடவேண்டும்.

இந்நோய் உருவாகுவதற்குப் பலவித காரணங்கள் உள்ளன.

  • நிகத்தை அண்டிய பகுதியில் காயம் ஏற்படல். இது பெரிய காயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறு கீறல் காயமே போதுமானது நிகத்தைச் சுற்றி நோவு உண்டாகுவதற்கு. இது நீங்கள் நிகத்தை வெட்டும் கருவி (Nail cutter) கொண்டு வெட்டாமல், நீங்களாகவே நிகத்தைப் பிய்க்கும் போதும் நிகச்சுத்தி உண்டாகலாம்.
  • நிகத்தின் ஓரங்கள் அருகினுளுள்ள சதையினுள் வளர்வதனாலும் இது வரலாம். இதனை, உள்ளே வளரும் நகம் (Ingrown Toenail) என்று சொல்லாம்.
  • அடிக்கடி தண்ணீரால் நகம் நனையும் அல்லது இரசாயனக் கலவைகள் தவறுதலாக ஊற்றப் படுவதாலும் நிகச்சுத்தி உருவாகலாம்

நிகச்சத்தி வந்தால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று அதனால் அவஸ்த்தைப்பட்ட அனைவருக்கும் தெரியும்.

நிகச்சுத்தி வராமல் தடுக்கும் வழிகளாவன;

இந்தக் கட்டுரையில் நான் தந்த படத்தினைப் பாருங்கள். அதில், நிகத்தின் இருமருங்கும் மஞ்சள் நிறமாக இருக்கின்றது. அந்த மஞ்சள் நிறம்தான் நிகத்தின் அருகுப் பக்கங்கள்; பழுத்து நோவைத் தரும் நிகச்சுத்தியாகும்.

இந்த நிலமை வருவதற்கு ஆரம்பத்திலேயே நிகத்தின் அருகுப்பக்கத்தில் ஏற்படும் நோவை இல்லாமாக்க வேண்டும். அந்த நோவு நிகத்தின் அருகுப் பக்கம் வளர்ந்து சதையினுள் போவதாகும்.

அந்த நிகப்பகுதி கூராக இருக்கும். அந்தக் கூர்ப்பகுதி நிகத்தை எமது கைவிரல் நகத்தாலே உயர்த்தி வெட்டிவிட வேண்டும். அவ்வளவுதான். அப்படி வெட்டி விட்டால் வளரும் அருகுப் பகுதி நகம் சதையைக் குற்றிக்கொண்டு வளராமல் தடுத்துவிடலாம்.

இவ்வாறு தடுப்பதனால் நிகச்சுத்தி வராமல் தடுத்துவிட முடியும்.
இப்படி இருப்பவர்கள் ஒருதரம் முயற்சித்துப் பாருங்கள். நான் கூறியது எவ்வளவோ உதவியாக உங்களுக்கு இருக்கும்.






தேனாரம் மருத்தவப் பிரிவு