
posted 17th July 2022
மக்களை தாக்கும் யானைகளை அடையாளம் கண்டு அவ் யானைகளைப் பிடித்து இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரா. துரைரெத்தினம், மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் (ப.ம) கேட்டுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ம் ஆண்டிருந்து 2022ம் ஆண்டு வரையும் சுமார் பதினைந்து வருடங்களுக்குள் 170ற்கு மேற்பட்டவர்கள் யானை தாக்கி 69ற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தும், 100ற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும், நூற்றுக் கணக்கான வீடுகள் சேதமாக்கப்பட்டும், 400ற்கு மேற்பட்ட தற்காலிக கொட்டில்கள், வாடிகள், குடிசைகள் நிரந்தர வீடுகள் சேதமாக்கப்பட்டும், 2500ஏக்கர்களுக்கு மேற்பட்ட வேளாண்மை காணிகளும், 3000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட மேட்டுநில விவசாயச் செய்கைகளும் பாதிப்படைந்த நிலையில் காடுகளில் யானைகள் தங்கக் கூடிய இயற்கைச் சூழல் இல்லாமல் போனமையினாலும், கிராமங்களுக்குள் நுழைந்து தங்களுடைய உணவை உண்டு பழகியதாலும் மீண்டும் மீண்டும் விவயாய பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, குளங்களோடு நிலத் தொடர்பு உள்ள காட்டுப்பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அதிகமாக உதாரணமாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சிறிய, பெரிய பதின் மூன்று குளங்கள் உள்ளதால் குறைந்தது நாளொன்றுக்கு சராசரி 30யானைகளுக்கு மேல் நாள்தோறும் எட்டு இடங்களில் யானைகளின் நடமாட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் வாழுகின்ற பகுதியில் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதால் யானைகளின் வரவை நிறுத்த முடியாது. காடுகளிலும் யானைகள் தங்கி நிற்கக் கூடிய சூழ்நிலைகளும் குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களுக்கிடையில் குறைந்தது பத்துக்கு மேற்பட்டோர் யானைகளினால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அரச நஸ்டஈடாக ரூபாய் பத்து இலட்சம் வழங்குவதும், மரணச் செலவுகளுக்கென இரண்டு மூன்று தினங்களுக்குள் ரூபா ஒரு இலட்சம் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இதில் சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் கிராமசேவகர் ஊடாக விரைவாக முன் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கை ஆரோக்கியமானதும், பாராட்டக் கூடியதும், முன்னுதாரணமும் ஆகும்.
ஆனால், காயப்பட்டு, விவசாயப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு, வீடு உடைக்கப்பட்டுள்ளவற்றிற்குரிய, ஏனைய கொடுப்பனவுகள் எந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது? இந்த விடயமும் இலகு படுத்தப்பட வேண்டும். அப்படி இலகு படுத்தப்பட்டால் மட்டுமே இலகுவாக ஏனைய கொடுப்பனவுகளையும் பெற முடியும்.
திணைக்களங்களைப் பொறுத்தவரையில் உத்தியோகத்தர்கள் விரைவாகவும், சிறப்பாகவும் செயற்பட்டாலும், ஒரு நாளில் குறைந்தது 20 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால், இத் திணைக்களத்தின் பலம் போதுமானதாக இல்லை. ஆனால், தினந்தோறும் இருபது இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் யானைகள் வேலிகளைத் தகர்த்துவிட்டு கிராமங்களுக்குள் ஊடுருவுவதால் ஒவ்வொரு நாளும் உயிரிழப்புக்களும், அழிவுகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதை தடுப்பதற்கு யானை வேலிகள் உள்ள கட்டைகளுக்கு மின்சாரக்கம்பி சுற்றுவதால் அறுபது தொடக்கம் எழுபது வீதமான யானைகளின் கிராமங்களுக்களுக்கான ஊடுருவுவதலைத் தடுக்க முடியும்.
இதேவேளை மண்முனைமேற்கு (வவுணதீவு), ஏறாவூர்பற்று (செங்கலடி), மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் மூன்று மாதங்களுக்குள் இரண்டு ஆண் யானைகளும், ஒரு பெண் யானையும் மொத்தமாக மூன்று யானைகளும், ஆறாம் கட்டை, குஞ்சர்வாடி, அடைச்சகல், மங்களகம சந்தி, புழுக்குநாவ, மொறிஸ்வீதி கோப்பாவெளி, மாவடிஓடை போன்ற பகுதிகளில் இவ் யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி எழுபேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனவே, இந்த மூன்று யானைகளையும் பிடித்து இடம் மாற்றப்படாத பட்சத்தில் யானைகளின் தாக்குதல்கள் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்ல வாய்ப்புகளுண்டு.
எனவே, திணைக்களங்கள் இந்த யானைகளை பிடித்து இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY