துரித பயிர்ச் செய்கை திட்டம்

உணவுப் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, துரித பயிர்ச் செய்கை திட்டத்தின் கீழ், மரவள்ளி மற்றும் இராசவள்ளிக் கிழங்கு ஆகிய நடும் நிகழ்வு, முள்ளிப்பொத்தானை வடக்கு கிராம சேவகர் பிரிவில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சபீரின் வீட்டுத் தோட்டத்தில் இச் செய்கைக்கான மரவள்ளி தடி நடும் நிகழ்வு நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உணவுப் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும் வகையில் இவ்வாறான திட்டம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு மட்டம் என ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பலரும் இதனை திறம்பட செய்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் சித்திக் மற்றும் கிராம அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

துரித பயிர்ச் செய்கை திட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More