
posted 26th July 2022
வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் உட்பட போராளிகள் மற்றும் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட 39 வது ஆண்டு நினைவேந்தல் மன்னாரிலும் அனுஷ்டிப்பதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
1983 ஆடித் திங்கள் 25 , 27ம் திகதிகளில் வெலிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை மற்றும் செயலதிபர் தளபதி குட்டிமணி முன்னணி போராளிகள் பொதுமக்கள் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் 53 பேரினதும் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே இடம்பெறுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
இவ் நினைவேந்தல் மன்னாரிலும் ரெலோ அலுவலகத்திலும் இடம்பெறுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஆடி 25 - 27 தினத்தை 'தமிழ் தேசிய வீரர்கள் தினம்' ஆக பிரகடனம் செய்து தலைவர்களை போராளிகளை நினைவு கூர்ந்து இவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)