
posted 10th July 2022
ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி யாழ்ப்பாணத்தில் சைக்கிள் பேரணி ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
அத்துடன் யாழ்.மத்திய பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ். நகர் நோக்கி நேற்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சைக்கிள் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பேரணி பங்கேற்றவர்கள் யாழ்.மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக சென்று அங்கு கூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
நேற்று நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)