
posted 20th July 2022
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை வளாகத்துக்குள் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு இளைஞன் என சி.சி.ரி.வி காணொளியின் மூலம் இணங்காணப்பட்டுள்ளது.
பாடசாலையின் வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விசாரா உத்தியோகத்தர் ஒருவரின் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
அந்த உத்தியோகத்தர் அலுவலகத்துக்குள் வேலையாக இருந்தபோது பாடாசாலை வளாகத்துக்குள் வந்த இளைஞன் சைக்கிளைத் திருடி சென்றுள்ளார். அதற்கான சி.சி.ரி.வி காட்சிகள் முழுமையாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக வவுனியா பொலிஸில் உரிமையாளர் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸாரால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான திருட்டுச்சம்பவங்கள் அண்மைக்காலமாக வவுனியாவில் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)