
posted 1st July 2022
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோரான சுகாதார பகுதினருக்காக கையிருப்பில் ஐ.ஓ.சியில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் சுகாதார பகுதினருக்கு வழங்குவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில் அதை குழப்பும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலமையை சுமூகமான நிலைக்கு கொண்டுவந்து இரண்டாம் நாளாகவும் மன்னாரில் எரிபொருள் வழங்கும் நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையத்தில் மாத்திரமே எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (30.06.2022) மன்னார் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பல தரப்பட்டவர்களுக்கும் எரிபொருள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் (01.07.2022) சுகாதார சேவையினருக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இவ்வெரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டபோது அங்கு தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக குழுமியிருந்தவர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை ஒரு சுமூகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவிக்கையில்;
தற்பொழுது ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (01.07.2022) வழங்கும் பெட்ரோல் அரச ஊழியர்கள் 150 பேருக்கும், 350 பொது மக்களுக்கும், 50 முச்சக்கர வண்டிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றதாகவும், இவ்வெரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு 6600 லீற்றர் வந்ததாகவும், இதில் பொது மக்களின் 500 மோட்டர் சைக்கிளுக்கும், அரச ஊழியர்களான 400 மோட்டர் சைக்கிள்களுக்கும், 275 முச்சக்கர வண்டிகளுக்கும், 50 ஏனைய சார்பான அமைப்புகளுக்கு வழங்கப்பட்டபின் வியாழக்கிழமை (30.06.2022) ஐ.ஓ.சி. எரிபொருள் வழங்கும் நிலையத்தில் வழங்கப்பட்ட பெட்ரோலைத் தொடர்ந்து 2000 லீற்றர் பெட்ரோல் சுகாதார பகுதினருக்கு என கையிருப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும், இன்று (வெள்ளிக்கிழமை) மாந்தை மேற்கு எரிபொருள் நிலையத்துக்கு பெட்ரோல் வருவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கையிருப்பில் வைக்கப்பட்ட எரிபொருளே தற்பொழுது வழங்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், மன்னார் மாவட்டம்)