சீரான எரிவாயு விநியோகம்

நாட்டில் ஏற்பட்ட சமையல் எரிவாயு பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தற்சமயம் கிரமமான முறையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம் பெற்றுவருகின்றது.

கொழும்பு போன்ற நகரப்புறமக்கள் எரிவாயு தட்டுப்பாட்டினால் அடைந்து வந்த பெரும் கஷ்ட நிலைமையும் ஓரளவு நிவர்த்திக்காப்பட்டு வருகின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்களுக்கு தற்சமயம் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் கட்டம் கட்டமாக சுமுகமான முறையில் இடம் பெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுடன் பிரதேச செயலாளர்களின் ஆலோசனை மற்றும் திட்டமிடலுக்கமையவும், பிரதேச செயலாளரi;களின் கண்காணிப்புடனும் தற்சமயம் லிட்றோ சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு மூன்றாம் கட்டமாக லிட்றோ சமையல் எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்பட்டடுள்ளன.

நிந்தவூரிலுள்ள 25 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் ஒரு தடவையில் சமார் ஆயிரம் சிலிண்டர் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி லத்தீபின் நேரடி கண்காணிப்பில், நிந்தவூர் கலாச்சார மண்டப வளாகத்தில் வைத்து குறித்த எரிவாயு சிலிண்டர்கள் குடியிருப்பாளர்களுக்கு சீராக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச குடியிருப்பாளர் பதிவின் அடிப்படையில் ஒவ்வொரு கட்டத்திலும் குறித்தொதுக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் கிரமமாக விநியோகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

சீரான எரிவாயு விநியோகம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY