
posted 19th July 2022
சில்லாலை புனித யாகப்பர் ஆலய பங்கு பணிமனை கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் திறந்துவைக்கப்பட்டது.
சில்லாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஆலய பங்குத்தந்தை அருட்பணி பாலதாஸ் பிறையன் அடிகளார் தலைமையில் கடந்த சனிக்கிழமை 16 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய பங்கு பணிமனை யாழ். ஆயர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டு திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
நிகழ்வில் அயல் பங்குகளின் அருட்பணியாளர்கள், ஆலய பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
இப் பங்கு பணிமனையை இவ்வாலயத்தைச் சேர்ந்த அமரர்களான திரு. திருமதி இராயப்பு ஞானம்மா குடும்பத்தின் பிள்ளைகளின் முழுமையான நிதிப்பங்களிப்பில் கட்டி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)