
posted 31st July 2022
“ஜனாதிபதி முன்னெடுத்துவரும் சர்வகட்சி அரசு அமைப்பு விடயத்திற்கு ஆதரவளித்து முஸ்லிம் சமூகமும் அதில் இணைய வேண்டும்.
இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை கூறினார்.
நிந்தவூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களுக்கான 4 ஆவது சபையின் 52 ஆவது அமர்வு சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் உரையாற்றுகையிலேயே பிரதிதவிசாளர் மேற்கண்டவாறு கூறினார்.
தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் சபை அமர்வு இடம்பெற்றது.
பிரதி தவிசாளர் சுலைமாலெவ்வை தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு அனுபவமும், ஆற்றலுமிக்க ரணில் விக்கிரசிங்க புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று தன் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
அதே வேளை சர்வகட்சி அரசு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
எமது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன இந்த சர்வகட்சி அரசியல் இணைந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
இதேவேளை முஸ்லிம் கட்சிகளான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும் குறித்த சர்வகட்சி அரசில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும்.
இதற்கென இக்கட்சிகள் ஜனாதிபதியுடன் பேசி இணக்கப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி முஸ்லிம் கட்சிகள் இந்த சர்வகட்சி அரசில் இணைவது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டுமெனக் கோருகின்றேன்.
தவிரவும் எரிபொருள் பிரச்சினையை முன்வைத்து ஒரு சில படித்தமேதாவிகளாகத்தம்மை வெளிக்காட்டும் நபர்கள் முகநூல்களில் நமது தவிசாளர் தொடர்பில் உண்மைக்குப்புறம்பான விடயங்களைப் பதிவிட முனைந்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தவிசாளரது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேர்த்தியான முறையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவது பிரதேச மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY