
posted 31st July 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 12 பேர் மணற்காடு பகுதியில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு 30.07.2022 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் அதிகாலை பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதி ஊடாக அவுஸ்ரேலியா செல்வதற்கு குழு ஒன்று திட்டமிட்டு தயாராகியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே குறித்த மணல்காடு வீடு சுற்றிவளைக்கப்பட்டு குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 18 பேர் தொடர்பிலும் பருத்தித்துறை போலீசார் தீவிர விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றன.
குறித்த கைது நடவடிக்கையில் SDIG பியந்த வீரசூரிய, DIG பியந்தலி தலைமையில் குழுவானது ஈடுபட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY