சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தவர் கைது

சட்டத்திற்கு முரணாக எரிபொருள் வைத்திருந்த சந்தேக நபருக்கு 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும், நிரப்பு நிலைய உரிமையாளர் முகாமையாளர் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளவும் கிளிநொச்சி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி நகரப் பகுதியில் 03-07-2022 அன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டத்திற்கு முரணான வகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 பரல்கள் அடங்கிய 6000 லீட்டர் டீசல், 210 லீட்டர் பெற்ரோல் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரையும், மேற்படி மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் நேற்றைய தினம் (04-07-2022) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் பி ஆர் ஸ்மாத் ஜெமில் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டது.

இதன்போது குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு எடுத்த மன்று, சந்தேக நபருக்கு 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

மேலும், எரிபொருளுக்காக மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து இவ்வாறு பெருந்தொகையான எரிபொருள் மூன்றாவது நபருக்கு வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டது.

குறித்த எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மற்றும் முகாமையாளர் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு குறித்த சந்தேகநபர்களை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு மன்றினால் கட்டளையிட்டுள்ளது.

சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தவர் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY