
posted 2nd July 2022
கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரடிப்போக்கு சந்திப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி போலீஸ் சிறப்பு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மெதவல அவர்களின் அவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்றைய தினம் 02.07.2022சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் 850 லிட்டர் டீசலும், 950 லிட்டர் மண்ணெண்ணெய் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடயப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் மேதவேல தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY