கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார்

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டமையை தொடர்ந்து, அரசமைப்பு விதிகளின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் கொழும்பு கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரையில் இடம்பெற்றது.

பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய அவருக்கு பதவிப் பிரமாணத்தை செய்து வைத்தார்.

இதேசமயம், வறிதாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான தெரிவு இந்த வாரம் இடம்பெறவுள்ளது. இதற்காக இன்றைய தினம் பாராளுமன்றம் கூடவுள்ளது.

சட்டவிதிகளின்படி, இன்றைய தினம் ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்து உத்தியோகபூர்வமாக பாராளுமன்றுக்கு அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து, எதிர்வரும் செவ்வாய்க் கிழமை வேட்பு மனு கோரப்படும். 20ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி தெரிவு இடம்பெறும். இந்த ஜனநாயகக் கட்டமைப்புக்குள் எந்தவித இடையூறும் இன்றி விரைவாக செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். இதற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY