குளவி கொட்டி குடும்பப் பெண் மரணம்

விறகு எடுக்க சென்றபோது கரும் குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராசசிங்கம் வீதி, வல்வெட்டி, வல்வெட்டித்துறையை சேர்ந்த ஈஸ்வரி பாஸ்கரன் (வயது- 60) என்பவராவார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) விறகு எடுப்பதற்காக மேற்படி குடும்பப் பெண் அயலில் உள்ள பகுதிக்கு சென்றபோது வீழ்ந்து இருந்த பனை ஓலையில் இருந்த கருங்குழவிகள் மூன்று அவரின் தலையில் கொட்டியவாறு விடுபடாமல் இருந்துள்ளன. சுதாகரித்துக் கொண்டு அவர் வீட்டுக்கு ஓடி வந்தபோது அவரின் மகள் குழவிகளை அகற்றி உடனடியாக ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (25) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி மாலை நேரம் உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

குளவி கொட்டி குடும்பப் பெண் மரணம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY