
posted 19th July 2022
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது திங்கட்கிழமை (18) மாலை வண்ணாங்கேணி பகுதியில் காணி துப்பரவு செய்து தீ வைத்த போதே இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக பளை பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவம் மற்றும் பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)