
posted 7th July 2022
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கிழக்கு மாகாண உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவம் இம்மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து 13 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று, ஓகஸ்ட் 11 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையை இருப்பதாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சுதநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு தற்போது நீர்ப்பாசன திணைக்களம், சிவதொண்டன் அமைப்பு உட்பட பல அமைப்புகள் ஆலய வளாகத்தில் சிரமதானத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விரைவில் உற்சவத்திற்கான ஆலய பரிபாலன சபைக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தலைவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)