
posted 8th July 2022
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மரபு வழி அறங்காவலரும் வாழ்நாள் தலைவருமான கா. ஆ. தியாகராசா (வயது 84) காலமானார்.
இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூரிலுள்ள அவரின் இல்லத்திலேயே அவர் காலமானார். இவரின் இறுதிக் கிரியைகளை நயினாதீவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அன்னார், உதவி அரசாங்க அதிபராக சேவையாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)