
posted 8th July 2022
ஜனாதிபதியை வெளியேற்றும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக எமது கல்வியை பாதுகாக்கும் உரிமைக்கான போராட்டத்தில் அனைவரையும் கைகோர்க்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா கேட்டுள்ளார்.
கல்முனையில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இன்று சனிக்கிழமை சகல அமைப்புகளினால் ஜனாதிபதியை வெளியேற்றும் போராட்டம் இடம்பெற தயார்படுத்தல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்வி உரிமை எதிர்கால மாணவர் தலைவர்களை பாதுகாப்பதற்கு சகல தரப்பும் முன்வர வேண்டும்.
கடந்த 4 வருடங்கள் தற்போதைய ஜனாதிபதி கல்வி சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டுள்ளதுடன் எஞ்சிய 2 வருடங்கள் அவர் ஆட்சியில் இருப்பதை விட நாம் அனைவரும் இணைந்து அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)