
posted 27th July 2022
கிளிநொச்சியில் 82 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்று (26) இரவு இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 82 போத்தல் கசிப்பு மற்றும் 238 லீற்ரர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும், இடியன் துப்பாக்கி ஒன்றையும் இராணுவத்தினர் கைப்பற்றினர்.
அத்துடன், இவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் பிடிக்கப்பட்டவர் தருமபுரம் பொலிஸாரிடம் சான்றுப் பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY