
posted 13th July 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கான சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
உத்தியோகத்தர்களின் வரவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கான அத்தியாவசிய, அவசரத் தேவைகளுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் சேவைகள், மோட்டார் வாகன ஆணையாளர், பதிவாளர் திணைக்களம் போன்றவற்றின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட சேவைகளை பெறுவதற்கான தூர இடங்களிலிருந்து வரும் பொதுமக்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதியும் அவர்களுக்குரிய சேவைகளை அசௌகரியம் இன்றி பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு ஏனைய சேவைகள் வழமை போன்று நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY