எரிபொருள் கிடைக்காததால் பல கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு

மன்னார் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை எரிபொருள் வழங்கலில் கவனத்தில் எடுக்கப்படாத நிலையால் இன்று மன்னாரில் பல கிராம மக்கள் குடிநீர் பெற முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மன்னார் நகர், திருக்கேதீஸ்வரம், வங்காலை, தோட்டவெளி, எருக்கலம்பிட்டி, காட்டாஸ்பத்திரி, அடம்பன், விடத்தல்தீவு, இவ்வாறு பல கிராமங்களுக்கு குழாய் மூலம் நாள் பூராகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

ஆனால் இக் குடிநீர் விநியோகம் சனிக்கிழமை (16.07.2022) காலை முதல் எவ்வித முன்னறிவித்தல் இன்றி தடைப்பட்டுள்ளதால் பாவனையாளர்கள் மிகவும் அவதிகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரியிடம் வினவியபோது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இக் குடிநீர் விநியோகம் தற்பொழுது தடைப்பட்டுள்ளது.

அத்துடன் இக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் இடங்களுக்குச் இங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சென்று செயல்படுத்துவதற்கு போக்குவரத்து கஷ்டம் ஒருபுறமிருக்க இவர்கள் சென்றுவரும் வாகனங்களுக்கு எரிபொருளுக்கு விண்ணப்பித்தும் எரிபொருள் வழங்குவதில் கவனம் செலுத்தப்படாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் போக்குவரத்து கஷ்டத்தின் நிமித்தம் நீர் வழங்கலில் செயல்படும் உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று செயலாயற்ற முடியாது இருப்பதனால் தற்பொழுது பல கிராமங்கள் குடிநீர் பெற முடியாத நிலையில் அவதிப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலை தொடராதிருக்க இதன் பொறுப்பதிகாரி மன்னார் அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு எரிபொருள் விநியோகத்துக்கு விண்ணப்பித்தும் இதுவரை தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கப் பெறவில்லை எனவும் இருந்தும் தாங்கள் எரிபொருள் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு தொடர்ந்து நீர் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எரிபொருள் கிடைக்காததால் பல கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY