எண்ணெய் காப்பு சாத்து நிகழ்வை இன்றைய போக்குவரத்தின்மை தடைசெய்யமுடியுமா என்ன?

இந்திய அரசாங்கத்தின் 325 மில்லியன் ரூபா நிதி உதவியுடனும் ஆலய மற்றும் வெளிநாடு உள்நாடு நலன் விரும்பிகளின் நிதியான சுமார் 480 மில்லியன் ரூபா நிதி உதவியில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் புனரமைப்புக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட மன்னாரில் பாடல் தளமாக விளங்கும் அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா வியாழக்கிழமை (30.06.2022) ஆரம்பமாகி எண்ணெய்க் காப்பு சாத்திர நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை காலை ஏழு மணியளவில் இடம்பெற்றது.

சிவஸ்ரீ கைலாச ராஜு குருக்கள் தலைமையில் இடம்பெற்று வரும் இன்றைய (03.07.2022) நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியில் நிர்மானிக்கப்பட்டிருந்த சிவன் சிலையும் பாலாவி தீர்த்தக்கரையில் அமைக்கப்பட்ட ஆறுமுகநாவலர் சிலையும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.

அத்துடன் இன்றைய இந் நிகழ்வில் அதாவது எண்ணெய் காப்பு சாத்து நிகழ்வில் போக்குவரத்து வசதிகள் அற்ற நிலையிலும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் எண்ணெய் காப்பு சாத்து நிகழ்வு திங்கள், செவ்வாய் (4,5.07.2022) ஆகிய இருதினங்களும் நடைபெற்று இத் தினத்தின் கடைசி நாள் நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறும்.

இதைத் தொடர்ந்தே 06.07.2022 அன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையான உத்தர நட்சத்திரம் சிம்மலக்கின நன்முகூர்த்தத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெறும்.

இவ் ஆலயத்தில் சிவன் மற்றும் அம்பாள் அவர்களை சுற்றி 24 சந்நிதிகள் காணப்படுகின்றன. இவர்களுக்கே இக் கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக் கும்பாபிஷேக நிகழ்வுக்கு இலங்கையிலுள்ள பிரசித்திப் பெற்ற குருக்கள், சிவச்சாரிகள் அத்துடன் இந்தியாவிலிருந்தும் வருகை தந்துள்ள குருக்களும் மற்றும் நல்ல ஆதின சுவாமிகளும் பலர் கலந்து கொள்ளுகின்றனர்.

எண்ணெய் காப்பு சாத்து நிகழ்வை இன்றைய போக்குவரத்தின்மை தடைசெய்யமுடியுமா என்ன?

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY