
posted 14th July 2022
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று (13) இடம்பெற்ற போராட்டத்துக்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில்;
வடக்கு - கிழக்கில் ஊடக அடக்குமுறை என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கிலே 39 ஊடகவியலாளர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதேபோல ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. கணிசமான ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள். இந்த நேரம்வரை ஊடகத்துறை என்பது ஒரு நெருக்கடியான துறையாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில் தான் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மீண்டும் பதிவாகியுள்ளது. வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு பரீட்சயமாக இந்த தாக்குதல்கள் காணப்பட்டாலும் கொழும்பில் அது மீண்டும் எதிரொலிக்கிறது. இந்த நிலையில் வடக்கு - கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான காணாமலாக்கல், படுகொலைகள், அச்சுறுத்தல்கள் போன்ற செயற்பாடுகளை நாங்கள் எவ்வாறு கண்டித்தோமோ தற்பொழுது கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.
அந்தவகையில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் . தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து மட்ட பிரச்னைகளிலும் எமது யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் இச்செயற்பாடுகளின்போது ஊடகங்களின் பங்களிப்பும் எமது கலைப்பீட மாணவர் ஒன்றியத்தோடு பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகிறது.
ஆகவே இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதோ அச்சுறுத்தப்படுவதோ தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அதனை அரச நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதனை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY