உலகிற்கு காண்பிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினால் எங்கள் 6 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

எங்கள் போராட்டத்தை நாங்கள் உலகிற்கு காண்பித்து விட்டோம். இதனால் நாங்கள் இந்த பிரதமர் அலுவலகத்துக்கு எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது எவ்வாறன நிலையில் நாங்கள் இந்த அலுவலகத்தை கைப்பற்றினோமோ அதே மாதிரியே மீண்டும் கையளித்து வெளியேறுகின்றோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்கள் கைப்பற்றிய பிரதம மந்திரியின் அலுவலகத்தை விட்டு வெளியேறுகையில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

இந்த போராட்டம் 9ந் திகதி நாங்கள் தொடங்கிய காரணம் இந்த நாடு கடந்த 74 வருடங்களாக பின்நோக்கிய செயலாகவே காணப்பட்டது.

இதற்கு முக்கியமான காரணம் கடந்த தலைவர்களே ஆகும். கடைசியாக வந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஒரே நாடு ஒரே சட்டம் என வந்தார்.

ஆனால் ஒருபோதும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற நிலைக்கு அவர் செயல்படவில்லை. இது முழுமையாக மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே இருந்தது. மக்கள் எதிர்பார்த்த எந்த விடயமும் அவரிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை.

ஆகவே, மக்கள் தற்பொழுது எதிர்பார்ப்பது இந்த நிலை மாற்றம் பெற வேண்டும் என்று. நாங்கள் ஆறு கோரிக்கைகள் முன் வைத்துள்ளோம். இவைகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்.

நாங்கள் இப்பொழுது பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதற்கு காரணம் இந்த போராட்டத்தின் சக்தி மக்களிடமே இருக்கின்றது என காண்பிக்கவே ஆகும்.

இதை நாங்கள் உலகிற்கு காண்பித்து விட்டோம். இதனால் நாங்கள் இந்த அலுவலகத்துக்கு எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது எவ்வாறன நிலையில் நாங்கள் இந்த அலுவலகத்தை கைப்பற்றினோமோ அதே மாதிரியே மீண்டும் கையளிக்கின்றோம்.

ஜனாதிபதி மற்றும் ரணில் விக்கிரமசிங்காவின் அடியாட்களாலேயே அவர்களுக்கு பாதிப்பு நடைபெற்றது. ரூபாவாகினிக்கு நாங்கள் சென்றோம். அவர்களுடனான பேச்சுவார்த்தை நடாத்தியே உள் சென்றோம்.

அவர்களிடம் நாங்கள் வலியுறுத்தியது நீங்கள் சுதந்திர ஊடகமாக செயல்பட வேண்டும் என தெரிவித்திருந்தோம்.

நாங்கள் தற்பொழுது வெளியேறுகின்றோம். ஆனால், மீண்டும் நிலைமையில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் மீண்டும் இவ்விடத்தை கைப்பற்றுவோம்.

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. எங்களை தீவிரவாதிகளாக காண்பிக்க எத்தனிக்கின்றனர். நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் இலங்கைவாழ் மக்கள் அந்த வகையிலேயே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஜனாதிபதியின் இடத்தை நாங்கள் வைத்திருந்ததுக்கு காரணம் எங்கள் போராட்டம் ஆரம்பத்தில் அங்கிருந்துதான் தொடங்கப்பட்டது. நாங்கள் கட்சி என்ற ரீதியில் இணையாமல் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே வந்து தனித்தனியாகவே சந்தித்து இப் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

இதை நாங்கள் கைவிட்டிருந்தோம் என்றால் எங்கள் போராட்டத்தில் அர்த்தம் இல்லாது ஆகிவிட்டிருக்கும். அங்கு கட்டிடத்தில் முக்கிய பத்திரங்கள் இருப்பதனால் அதை நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு முன் பகுதியில் நாங்கள் புத்தகசாலை மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டு செயல்பட்டோம் என தெரிவிக்கப்பட்டது.

உலகிற்கு காண்பிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினால் எங்கள் 6 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY