
posted 17th July 2022
உப ஜனாதிபதிகள் இருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் முஸ்லிம், தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன் வைத்த கோரிக்கையை நாட்டின் எதிர்கால நலனை முன்னிட்டு பொதுஜன பெரமுன கட்சி ஏற்றுக்கொள்ளாமை பெரும் தவறாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது;
கௌரவ பதில் ஜனாதிபதி ரணில் முன் வைத்த இக்கோரிக்கையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிராகரித்திருப்பதாக அறிய முடிகிறது.
இரு உப ஜனாதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) முன் வைத்துள்ள தீர்வுத்திட்டத்திலும் உள்ளது.
இக்கோரிக்கையை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஏற்கவில்லை என்றும் இதை மகாநாயக்கர்கள் ஏற்கமாட்டார்கள் என சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாநாயக்க தேரர்கள் விரும்புவது போன்று இங்கு யாரும் ஆட்சி செய்வதை காணவில்லை. நாட்டை கொள்ளையடிக்காதீர்கள், ஊழல், லஞ்சம் வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் சொல்வதை கேட்டிருந்தால் நாடு இந்தளவு மோசமாகியிருக்காது.
இரண்டு உப ஜனாதிபதிகளினால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது என்பது உண்மை. ஆனாலும் நமது நாடு பற்றிய நல்லபிப்பிராயம் சர்வதேசத்தில் ஏற்படும். சிறுபான்மை சமூகங்களுக்கும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது என்பதை உலகுக்கு காட்ட முடியும். இது நாட்டில் இனங்களுக்கிடையிலான அதிகார போட்டியையும் குறைக்கும்.
ஆகவே பதில் ஜனாதிபதி ரணிலின் இந்த கோரிக்கையை எமது கட்சி பெரிதும் வரவேற்பதுடன் பொதுஜன பெரமுனவும் இதை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்வதன் மூலம் அக்கட்சி இனவாத கட்சியல்ல என்பதை காட்ட முடியும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY