
posted 19th July 2022
மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்தவரும், பல பொது அமைப்புக்களில் இணைந்து சமூக சேவையில் ஈடுபவரும் எருக்கலம்பிட்டி பெண்கள் அரபு கல்லூரியில் விரிவுரையாளராகவும், தாராபுரம் துருக்குச்சிட்டி பள்ளிவாசலில் மௌலவியாக கடமைபுரியும் மௌலவி பேஷ் இமாம் காதர் பாச்சா பாசிர் என்பவருக்கு, மன்னார் பிரதேச செயலகப் பிரிவின் இஸ்லாமிய திருமண பதிவாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களினால் திங்கள் கிழமை (18.07.2022) நியமனக் கடிதம் கொடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் மௌலவி பேஷ் இமாம் காதர் பாச்சா பாசிர் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் தனது கடமையை ஆரம்பிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)