
posted 5th July 2022
இந்திய நிவாரண உதவி திட்டத்தின்கீழ், இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது.
இதன்போது 7250 குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் வீதம் அரிசியும் 1300 பேருக்கு பால்மா பொதியும் வழங்கப்பட்டன.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச்.எம். கனி தலைமையில், பிரதேச செயலகத்தில் வைத்து இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இதன்போது பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்;
முக்கியமான காலகட்டத்தில் இந்த நிவாரணம் வழங்கப்படுகின்றது. இதற்காக இந்திய அரசாங்கத்துக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம்.
முதலாம் கட்டத்தில் கிண்ணியாவுக்கு 4125 குடும்பங்களுக்கு அரிசியும், 300 குடும்பங்களுக்கு பால்மா பொதியும் வழங்கப்பட்டன.
மூன்றாம் கட்டமாகவும் நிவாரணப் பொதிகள் வர இருக்கின்றன. அவற்றையும் நாங்கள் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்த அளிப்பதற்கு காத்திருக்கின்றோம்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY