ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேர்  கைது

வல்வெட்டுத்துறை ஊடாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது.

யாழ் வல்வெட்டித்துறை ஊடாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேரை வல்வெட்டித்து பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு கைது செய்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, சட்ட விரோதமான முறையில் படகு ஒன்றின் மூலமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட திருகோணமலை, வவுனியா மற்றும் புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் படகோட்டிக்கு செலுத்தி ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டுத்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேர்  கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)