
posted 29th July 2022
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்பட்ட வரவு செலவு நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் தாமரைக்குளம் புனித வேளாங்கன்னி ஆலயம் மற்றும் மாளிகைத்திடல் புனித மரியமாதா ஆலயத்தக்கும் சுமார் தலா அறுபதாயிரம் ரூபா பெறுமதியான கதிரைகள் வழங்கப்பட்டன.
மாந்தை மேற்கு பிரதேச சபை நெடுங்கண்டல் வட்டார உறுப்பினர் செ.சந்தான் (ராசையா) அவர்களின் தலைமையில் மாந்தை பிரதேச செயலகத்தில் வைத்து அவ் ஆலயங்களின் மேய்ப்புப் பணி சபை உறுப்பினர்களிடம் கடந்த திங்கள் கிழமை (25) கையளிக்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)