
posted 29th July 2022
நேற்று வியாழக்கிழமை (28) தந்தையை இழந்தவர்களுக்கு பிரதிர்க்கடன் செலுத்தும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலை கடற்கரையில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.
அதேவேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவமும் இன்று கீரிமலை கடற்கரையில் நடைபெற்றது. அதன் போதும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு தீர்த்தமாடினர்.
ஆடி அமாவாசை விரதமானது இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவராலும் பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் விரதம். இந்நாளில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி தம் மூதாதையர்களை முக்கியமாக பெற்ற தந்தையை நினைவு கூர்ந்து விரதமிருந்து பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆகும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY