அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (21) மாலை 6 மணியளவில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. பளை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

இதன் போது, சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த 3 உழவு இயந்திரங்களுடன், 03 சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY