
posted 22nd July 2022
வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தொண்டர் சபையினர் மற்றும் கனடாவாழ் தொண்டர்கள் இணைந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 200 பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர்.
வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற இந்த இடர்கால நிவாரணப்பணியின் போது நல்லூர் பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 5000.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)