
posted 6th July 2022
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டதான கொடியேற்றம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித் திருநாட்டின் தென்கிழக்கில் வரலாற்றுச் சிறப்புடன் இயற்கை எழில் நிறைந்த அக்கரைப்பற்று பதிதனில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் கடந்த இரு வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகோற்சவம் இடம்பெறாத நிலையில் இவ்வருடம் மகோற்சவம் இடம்பெறுகின்றது.
நேற்று முன் தினம் அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து அங்கிருந்து கொடிச் சீலை எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சகிதம் கொடிச்சீலை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் அங்கு யாக பூசைகள் நடைபெற்றதுடன் தொடர்ந்து ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூசை இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூசை நடைபெற்றதன் பின்னர் எழுந்தருளிய விநாயகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார்.
கொடிக்தம்பம் அருகே இடம்பெற்ற பூசைகளின் பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY