575kg கஞ்சாவுடன் இருவர் கைது

கேரள கஞ்சா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 575 kg கஞச்சாவை கைப்பற்றியதுடன், கடத்திவந்ததாக கூறப்படும் இருவரையும் செவ்வாய்க்கிழமை (19) இரவு கைது செய்த கடற்படை குறித்த இருவரையும், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கஞ்சா என்பனவற்றையும் பொலீசார் ஊடக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட மாதகல் பகுதியை சேர்ந்த நபர்களையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பனவும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

575kg கஞ்சாவுடன் இருவர் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)