
posted 17th July 2022
தலைமன்னார் பியரிலிருந்து ஒரு படகில் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லையென இவர்கள் தேடப்பட்டு வருவதுடன் இவர்களைப்பற்றி இதுவரை எங்கிருந்தும் தகவல்கள் வரவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் பியரைச் சார்ந்த மூன்று மீனவர்கள் ராசதுரை இராசசேகர் (வயது 52) ராஜமூர்த்தி மோகன்ராஜ் (வயது 50) ராஜி ஜனாத் (வயது 27) ஆகிய மூவரும் வழமைபோன்று தலைமன்னார் பியர் துறையிலிருந்து வட கடலில் வலிச்சல் வலை மீன் பிடிக்காக வியாழக்கிழமை (14.07.2022) பிற்பகல் ஒரு மணியளவில் ஒரு வெளிக்கள இயந்திரப் படகில் (படகு இல. ஓஎவ்ஆர்பி-ஏ-4138 எம்என்ரி) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் அன்று வழமைபோன்று கரை திரும்பாததால் இப் பகுதி மீனவர்களும் கடற்படையினரும் வெள்ளிக்கிழமை (15.07.2022) தொடக்கம் இன்று வரை தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சனிக்கிழமை (16.07.2022) வரைக்கும் இவர்களையோ இவர்கள் சென்ற படகையோ இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது
கடந்த ஓரிரு தினங்களாக இவ் பகுதியில் பலத்த காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிந்திய செய்தி
காணாமல் போன மூன்று மீனவர்களில் இருவர் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவரை தேடும் பணியில் மீனவர்கள்.
( வாஸ் கூஞ்ஞ) 17.07.2022
கடும் காற்றும் கடல் கொந்தளிப்பாகவும் இருந்தவேளையில் தலைமன்னார் பியிரிலிருந்து மீன்பிடிக்காக ஒரு வெளிக்கள இயந்திரப்படகில் சென்ற மூன்று மீனவர்கள் படகு கவிழ்ந்ததில் இருவர் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவரை காணவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார் பியரிலிருந்து ஒரு படகின் மூலம் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லையென இவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் இவர்களில் இருவர் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற படகையும் ஒருவரையும் தேடும்பணி தொடரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
தலைமன்னார் பியரைச் சார்ந்த மூன்று மீனவர்கள் ராசதுரை இராசசேகர் (வயது 52) ராஜமூர்த்தி மோகன்ராஜ் (வயது 50) ராஜி ஜனாத் (வயது 27) ஆகிய மூவரும் வழமைபோன்று தலைமன்னார் பியர் துறையிலிருந்து வட கடலில் வலிச்சல் வலை மீன் பிடிக்காக வியாழக்கிழமை (14.07.2022) பிற்பகல் ஒரு மணியளவில் ஒரு வெளிக்கள இயந்திரப் படகில் (படகு இல. ஓஎவ்ஆர்பி-ஏ-4138 எம்என்ரி) புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கரைவந்து சேராத காரணத்தினால் இவர்களை கடலில் தேடும் பணியில் எரிபொருள் இல்லாத காரணத்தினால் பூரணமாக தேடுதலை மேற்கொள்ள முடியாத நிலையிலும் பல இடங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு இவர்கள் மட்டில் கவனம் செலுத்தப்பட்டு வந்தது.
இவ்வாறான நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கச்சத்தீவு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிருடன் இருப்பதாகவும் அங்கிருந்து செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக தலைமன்னார் பியரிலிருந்து மீனவர்கள் சென்றிருப்பதாகவும் அத்துடன் ஒருவர் ராசதுரை இராசசேகர் (வயது 52) என்பவரும் இவர்கள் சென்ற படகையும் தேடி மீனவர்கள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றவேளையில் கடலில் கடும் காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டதால் படகு கவிழந்ததாலேயே இந்த அனர்த்தம் எற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ் அனர்த்ததிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் மாமாவும் மருமகனுமாகிய ராஜமூர்த்தி மோகன்ராஜ் (வயது 50) ராஜி ஜனாத் (வயது 27) ஆகியோர் எனவும் காணாமல் போனவர் மட்டக்களப்பைச் சார்ந்தவரும் முல்லைத்தீவில் திருமணம் செய்தவர் என்றும் இவர் தொழிலுக்காக தலைமன்னார் பியருக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY