
posted 23rd July 2022
வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் வழங்கப்பட்டது.
வவுனியா மாவட்ட கமநல சேவை திணைக்களத்தினருக்கு கிடைக்கப் பெற்ற 49.5 மெற்றிக்தொன் உரத்தை விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்கும் நடவடிக்கை கமநல சேவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 50 நாட்களுக்கு குறைந்த நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 கிலோ யூரியாவும், 50 நாட்களுக்கு மேற்பட்ட நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு 20 கிலோ யூரியாவும், ஒரு கிலோ யூரியா 200 ரூபாய் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தினால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரமே விவசாயிகளுக்கு இவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த உரம் வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை செட்டிக்குளம், அருவித்தோட்டம், நேரியகுளம், பெரியநொச்சிக்குளம், பாவற்குளம் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, தனியார் கடைகளில் 50 கிலோ யூரியா 38 ஆயிரம் தொடக்கம் 42 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY